ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் பஞ்சாப் அணிக்கும் சென்னை அணிக்கும் மலன்புரில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்தது. கடந்த மூன்று போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் வீரர்கள் 219க்கு 6 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், ப்ரியன்ஸ் ஆர்யா என்னும் வீரர் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்களும் அவருக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் சென்னை அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் கலீல் அஹ்மத் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய சென்னை அணி முதலில் எப்போதுமில்லாத வகையில் வேகமாக தொடங்கியது. கான்வே 69 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கி இறுதி வரை போட்டியை கொண்டு சென்றனர். இறுதியில் சென்னையனியால் வெறும் 201 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டியை வென்ற பஞ்சாப் அணி தனது மூன்றாவது வெற்றியை இந்த வருடம் பதிவு செய்தது. மேலும், தொடர்ந்து நான்கு போட்டிகளை தோற்று பரிதமான நிலையில் சென்னை இருக்கிறது.



