சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் தீவிரகமாக தவெக ஈடுபட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 12,500 இடங்களில் கொள்கை விளக்க கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டப்படியும், பயிற்சி அமர்வும் இன்று சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், கொள்கை பரப்பணிக் குழுவினரும், புதிதாக நியமிக்கப்பட உள்ள பேச்சாளர்களும் பங்கேற்றனர்.




