கோமா நிலை என்பது: மூளை இன்னும் உயிருடன் இருக்கும், ஆனால் செயலற்று இருக்கும் நிலையாகும்.
மூளையில் சமிக்ஞைகள், இரத்த ஓட்டம்
மற்றும் சில அனிச்சைகள் செயலில் இருக்கும். கோமா நிலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால் மீண்டு வர வாய்ப்புள்ளது.
🧠 மூளை மரணம் என்பது: மூளை செயல்பாடு யாவும் நிரந்தரமாக நின்றுவிட்டன என்பதாகும். அதில் செயல்பாடு இருக்காது. சுவாசம் இருக்காது, மீண்டு வரவும் முடியாது.
மருத்துவ ரீதியாகவும் தான் சட்ட ரீதியாகவும் தான் மூளை மரணம் என்பது உண்மையான மரணமாகும். இதயம் மாத்திரம் இயந்திரங்களின் உதவியுடன் தொடர்ந்தும் துடித்துக் கொண்டிருக்கும்.
சுருக்கமாக சொல்வதென்றால்
கோமா நிலைக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் குணமாகி வரலாம்.
மூளை மரணம் நிலை வந்தால் குணமாகி வர முடியாது என்பது உறுதியாகும்.



