கோயில்களில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??
பொதுவாக எல்லாரும் கோயிலுக்கு சாமி கும்பிடும் போகும்போது தேங்காயை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம் ஏனென்றால் சாமிக்கு உடைக்கும் தேங்காய் நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வேலை தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ தேங்காய் அழுகி இருந்தாலோ அதற்கு என்ன அர்த்தம் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..?? தேங்காயில் இருக்கும் மூன்று கண்களில் முதல் கண் பிரம்மன் இரண்டாவது கண் லட்சுமி மூன்றாவது கண் சிவன் இது பொதுவான நம்பிக்கை. இத்தகைய சிறப்புமிக்க தேங்காயை சுவாமிக்கு உடைக்கும் போது அது அழுகி இருந்தால் அது ஒரு மிகப்பெரிய அபசகுனம் என்று கருதி மக்கள் வருத்தப்படுவது வழக்கம். ஆனால் தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் அழுகியிருந்தால் அது தன்மையே இதன் மூலம் தீய சக்திகள் பீடை கண் திருஷ்டி போன்றவை அகன்று போகும் என்று தான் அர்த்தம்.
தேங்காய் கொப்பரையாக இருந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காய் கொப்பரையாக இருந்தால் அந்த வீட்டில் ஏதோ சுபகாரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம். தேங்காய் பூ இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு
நல்ல சகுனமாகவும் லாபம் பணம் வரவு எதிர்பாராத சுப காரியங்கள் மற்றும் நல்ல நிகழ்வுகள் நடக்கப்போகிறது என்று அர்த்தமாம்.




