முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்..!! என்று கூறுவதற்கு காரணம் என்ன தெரியுமா..??
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம் .ஆனால் அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு கிராமத்தில் ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ காய் இலை பிசின் என்ற அனைத்தும் பயன் தரக்கூடியவை. பொதுவாகவே முருங்கை மரம் முருங்கைக்கீரை முருங்கை பூ காய் என அனைத்தும் அதிக அளவு மருத்துவம் மற்றும் ஆரோக்கிய பலன்கள் உள்ளது என்று நம்மில் பலருக்கும் தெரியும். அதே மாதிரி தான் முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய ஒரு அற்புதமான மூலிகை என்று கூட கூறலாம். இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறும் கையோடு நடந்து செல்வார்கள் இதை தான் நம் முன்னோர்கள் முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று கூறுகிறார்கள். இதுவே அதற்கான உண்மையான அர்த்தம் ஆகும்.




