நடிகை சமந்தா, இயக்குனர் ராஜ் நிதிமோருவை நேற்று இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சமந்தாவின் முன்னாள் ஒப்பனை கலைஞர் சாதனா சிங் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமண அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, சாதனா சமந்தாவை மறைமுகமாக ‘வில்லன்’ என சித்தரித்து பதிவிட்டிருந்தார். இது சமந்தா ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியதுடன், சாதனா இணையத்தில் விமர்சனத்திற்குள்ளானார்.



