இந்திய பெருங்கடல் பகுதியில் 2014ல் 239 பேருடன் மாயமான மலேசிய MH270 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் தொடங்கப்படுகிறது. டிச.30 முதல் “No Find, No Fee” முறையில் அமெரிக்காவின் Ocean Infinity நிறுவனம் 55 நாட்கள் இந்த தேடுதலை நடத்த உள்ளது. விமான பாகங்கள் கண்டறியப்பட்டால் $70 மில்லியன் வழங்க மலேசிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. விமானம் தொலைந்த இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மீண்டும் தீவிர தேடுதல் நடைபெற உள்ளது.



