தமிழக அரசு 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளையும், பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி பெயரில் அகில இந்திய விருதுகளையும் அறிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகளை வழங்க உள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பட்டியலில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.




