ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சித்தரத்தை..!! இதில் இருக்கும் மருத்துவ குணம் பற்றி தெரியுமா..??

ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய சித்தரத்தை,

சித்தரத்தை என்ற அழகான பெயரை கொண்ட இந்த தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன இஞ்சி’ என்று அழைக்கிறார்கள். இது காரச் சுவை கொண்டது.

இந்த தாவரம் குறுஞ்செடியாக வளரும். இலைகள் நீண்டு காணப்படும். இதன் கிழங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்ந்த பின்பு அடர்ந்த சிவப்பு நிறமாக மாறும். இது மருத்துவகுணம் நிறைந்தது. நறுமணம் கொண்டது. இதில் இருக்கும் நறுமண எண்ணெய் இதன் மருத்துவதன்மைக்கு காரணமாகும்.

‘அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்ற சொல்வழக்கு ஒன்று உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் கபத்தை வெளியேற்றும் சக்தி சித்தரத்தைக்கு இருக் கிறது.

நம் உடலில் தொண்டை மிக முக்கியமான உறுப்பு. நோய்களை தடுக்கும் சுவர் போன்றது இது. அதனால் தொண்டையை நன்றாக பாதுகாக்கவேண்டும். அதற்கு சித்தரத்தை உதவுகிறது. இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும்.

சிலருக்கு உடல்சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சுவைக்கவேண்டும். இது இருமலை போக்கும் சிறந்த மருந்து.

குழந்தைகள் இருக்கும் வீடுகளில் சித்தரத்தையை கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அவைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஷீரணத்தை தூண்டும்.

சித்தரத்தை சிறந்த மணமூட்டி. சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும். ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் சீராகும். சிலருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு சுவைத்துக்கொண்டிருந்தால் வாந்தி வராது. வயிற்றை புரட்டுவது போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது. முற்காலத்தில் கப்பலில் பயணம் செய்கிறவர்கள் சித்தரத்தையை சுவைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

வாயு கோளாறு, இருமல், தலைவலி, காய்ச்சல், வாந்தி, சுவாச கோளாறுகளுக்கு இது நல்ல மருந்து. மேற்கண்ட பாதிப்பு கொண்டவர்கள் 10 கிராம் சித்தரத்தையை நன்கு இடித்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவேண்டும். இதற்கு வலியை நீக்கும்தன்மையும் உண்டு. மூட்டுகளில் ஏற்படும் இறுக்கத்தை சீராக்கும். தசை பிடிப்பை நீக்கும். மூட்டு வலி, வீக்கம் இருப்பவர்கள் சித்தரத்தையை இடித்து, கஞ்சியில் கலந்து சாப்பிடவேண்டும்.

தொற்று நோய் காரணமாக ஏற்படும் காய்ச்சலுக்கு 10 கிராம் நிலவேம்பு இலையுடன், 10 கிராம் சித்தரத்தையை சேர்த்து, 200 மி.லி. நீரில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி பருகவேண்டும். உடல் வலி குறையும், நன்கு பசி எடுக்கும்.

குழந்தைகளை குளிக்கவைத்து தலைதுவட்டிய பின்பு, சிறிதளவு சித்தரத்தை தூளை அவற்றின் தலை உச்சியில் தேய்த்தால் சளி பிடிக்காது.

குழந்தை பெற்ற பெண்களுக்கு வழங்கப்படும் பிரசவ லேகியத்தில் சித்தரத்தை சேர்க்கப்படு கிறது. சுவாச நோய்களுக்கான மருந்துகள், இருமல் மருந்துகள், வலி மற்றும் ஷீரண நோய்களுக்கான மருந்துகளில் சித்தரத்தை சேர்க்கப்படுகிறது.

சித்தரத்தை குறுஞ்செடிகளை எளிதில் வீடுகளில் தொட்டிகளிலேயே வளர்க்கலாம். இதன் பூக்கள் மிக அழகாக இருக்கும். செடியில் நறு மணம் வீசும். இதன் கிழங்குகளை சீவி, காய்கறிகளை கலந்து சூப்பாக தயார் செய்து பருகும் வழக்கம் கிழக்காசிய நாடுகளில் உள்ளது. சாலட்டாக தயார் செய்தும் சாப்பிடுகிறார்கள்.

10 கிராம் அளவுக்கு கிழங்கை எடுத்து, அரைத்து, எலுமிச்சம்பழ சாற்றில் கலந்து, தேனும் சேர்த்து சாப்பிட்டால் இருமல் குறையும். பற்களும் பளிச்சிடும்.

சித்தரத்தை, சித்தரத்தை தூள், சித்தரத்தை கிழங்கு போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.
சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து பருகிவர, ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் யாவும் விலகிவிடும்.

ஆஸ்துமா குணப்படுத்த :சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும்.

எலும்புகள் பலம் பெற :இந்த பாதிப்புகள் யாவும் நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில், நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வெகுநாட்களாக துன்பமளித்த வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும்.

உலர்த்தி சிறு துண்டுகளாக வெட்டிய ஒன்றிரண்டு சித்தரத்தையை, மூன்று தம்ளர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிவரும் வேளையில், நீரை எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் இருவேளை, சில நாட்கள் தொடர்ந்து பருகிவர, வறட்டு இருமலை தணிக்கும்.

சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.
மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.
சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதைப் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு…

Read Previous

தொடர் ஹிட் நாயகனாகும் ஹரிஷ் கல்யாண்..!!

Read Next

சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular