2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வென்றுள்ளார். இந்த விருதுக்கு பும்ரா, இங்கிலாங்தின் ஹாரி ப்ரூக், ஜோரூட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்தாண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா விருதை தட்டிச்சென்றார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் (2004), கவுதம் கம்பீர் (2009), சேவாக் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2018) ஆகிய இந்திய வீரர்கள் இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




