சிறந்த வீடு என்றால் என்ன என்பதை குறித்து அப்பா தனது மகளிடம் கூறியது என்ன தெரியுமா..?? படித்ததில் பிடித்தது..!!

சிறந்த வீடு.
அப்பா தனது மகளிடம் கூறினார்:

என் மகளே, உன் வாழ்க்கையில், மூன்று விஷயங்களை விட்டுவிடாதே:

சிறந்த உணவை உண்ண வேண்டும்.

சிறந்த படுக்கையில் தூங்கவேண்டும்.

சிறந்த வீட்டில் வாழ வேண்டும்.

மகள் கேட்டாள்..

நாம் ஏழைகள், நான் எப்படி அவ்வாறு செய்யமுடியும்?அப்பா

அப்பா கூறினார்:

பசிக்கும் போது மட்டும் சாப்பிட்டால், என்ன சாப்பிடுகிறாயோ அதுவே சிறந்த உணவு,

நிறைய வேலை செய்து சோர்வாக தூங்கினால், அந்தப் படுக்கைதான் சிறந்த படுக்கை,

மக்களிடம் அன்பாக நடந்து கொண்டு, அவர்களின் இதயங்களில் நீ குடியிருந்தால் அதுதான் நீ வாழும் வீடுகளில் சிறந்த வீடு…

Read Previous

குளிர்ந்த நீர் குடிப்பது நல்லதா..?? வெந்நீர் குடிப்பது நல்லதா..??

Read Next

தங்கத்தின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular