வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின் மயானங்கள் மற்றும் இயற்கை எரிவாயு தகன மேடைகளில் வழக்கமாக சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், எரியூட்டும் மையங்களில் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் பெரிதும் இயற்கை எரிவாயு மூலமே சடலங்கள் எரிக்கப்படும் நிலையில், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.




