நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எரிபொருளை மிச்சப்படுத்த உதவும் சில எளிய நடைமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சமையலுக்கு அகலமான பாத்திரங்கள் மற்றும் பிரஷர் குக்கர்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 20% எரிபொருளை சேமிக்கலாம். மேலும், சமையல் ஒரு கொதி நிலையை அடைந்ததும் தீயை குறைத்து வைப்பதுடன், தேவையான அளவு குறைந்த நீரை பயன்படுத்துவதன் மூலம் நீர் ஆவியாகும் நேரத்தை குறைத்து சிலிண்டரின் ஆயுளை நீட்டிக்க முடியும்.



