சீரகத்தின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க.!!
நம் தமிழில் சேர்க்கும் சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலின் உட்புறத்தை சீராக வைத்திருக்கும் என்பதால் சீரகம் என இதற்கு பெயர். இதன் மருத்துவ குணங்கள் ஏராளம்.
கடுமையான வயிற்று வலிக்கு சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்றாக மென்று தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ரத்தம் மூலம் தீரும் கற்கண்டும் சீரகமும் கலந்து சாப்பிட இருமல் உடனடியாக நிற்கும்.
சீரகப் பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். அதுமட்டுமின்றி வெறும் வாயில் சீரகத்தை மென்று சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும் செரிமானம் நன்றாக ஏற்படும். சீரகப் பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.




