வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மிக அதிகனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த தீவிர மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை கீழ் காணலாம்.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
- திருப்பதியில் மாலை 6.05-க்கு புறப்படவுள்ள 16058 சென்னை சென்ட்ரல் ரயில், முழுமையாக ரத்து.
- சென்னை சென்ட்ரலில் மாலை 4.35-க்கு புறப்பட வேண்டிய 16203 திருப்பதி விரைவு ரயில், முழுமையாக ரத்து.
- சென்னை சென்ட்ரலில் இரவு 9.15-க்கு புறப்படவுள்ள 16021 மைசூர் காவேரி ரயில், முழுமையாக ரத்து.
- சென்னை சென்ட்ரலில் இரவு 11 மணிக்கு புறப்படவுள்ள 22649 ஈரோடு ஏற்காடு ரயில், முழுமையாக ரத்து.




