செய்த பாவங்கள் விலக தானம் செய்யுங்கள்.
அன்னதானம் கடன் தொல்லைகள் நீங்கும்.
அரிசி தானம் முன் ஜென்ம பாவங்கள் விலகும்.
ஆடைகள் தானம் சுகபோக வாழ்வு அமையும்.
பால் தானம் துன்பங்கள் விலகும்.
நெய் தானம் பிணிகள் நீங்கும்.
தேங்காய் தானம் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்.
தேன் தானம் புத்திர பாக்கியம் கிட்டும்.
பூமிதானம் பிறவா நிலை உண்டாகும்.
பழங்கள் தானம் மன அமைதி உண்டாகும் பித்ரு கடன் நீங்கும்.
தயிர் தானம் இந்திரிய விருத்தி உண்டாகும்.
நெல்லிக்கனி தானம் அறிவு மேம்படும்.
தங்கம் தானம் தோஷம் நிவர்த்தியாகும் .
வெள்ளி தானம் கவலைகள் நீங்கும்.
கோதுமை தானம் கடன் அகலும்.
எண்ணெய் தானம் ஆரோக்கியம் உண்டாகும் .
காலனி தானம் பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும்.
பாய் தானம் அமைதியான மரணம் உண்டாகும்.
காய்கறிகள் தானம் குழந்தை ஆரோக்கியம் மேம்படும்.
பூ தானம் விரும்பிய இல்வாழ்க்கை அமையும்.
மஞ்சள் தானம் சுபிட்சம் உண்டாகும்.
எள்ளு தானம் சாந்தி உண்டாகும்.
வெல்லம் தானம் வம்ச விருத்தி உண்டாகும்.
தண்ணீர் தானம் மன மகிழ்ச்சி உண்டாகும்.
சந்தன தானம் காணும் கீர்த்தி உண்டாகும்.
புத்தகம் தானம் கல்வி ஞானம் உண்டாகும். நம் சக்திக்கு ஏற்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்.




