Oplus_131072
செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!
செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் முன்புறம் வளர்த்தால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது. வீட்டிற்குள் துஷ்ட ஆவிகள் நுழையாது அதுமட்டுமின்றி பில்லி, சூனியம் செய்வினை போன்றவற்றால் வீட்டில் வசிப்பவர்களுக்கு எந்த வித பாதிப்பும் வராது. வெள்ளருக்கு சிவனாருக்கு உகந்தது என்பதால் வெள்ளெருக்கு செடி வீட்டின் முன் வைப்பது விசேஷம் என்று கூறப்படுகிறது. இதனுடைய வளர்ச்சி வீட்டில் செல்வ செழிப்பை ஏற்படுத்துமாம். நவகிரகங்களில் எருக்கன் செடி சூரிய பகவானின் தன்மை கொண்ட ஒரு செடி. வெள்ளருக்கு அதிர்ஷ்டம் மற்றும் புதையல் இருக்கும் இடங்களில் அதிகம் வளரும் என்பதால் அந்த செடி வீட்டின் முன் நன்கு வளர்ந்தால் அது போன்ற அதிர்ஷ்டத்தை வீட்டுக்கு அழைத்து வரும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.



