சோகம்.. கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..!! 20 பேர் படுகாயம்..!!

மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜவஹர்புரா கிராமத்திற்கு அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மீது லாரி ஒன்று திடீரென மோதியது. இக்கோர விபத்தில், 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 20 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதிகாலை சுமார் 5 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பு..!! அதிர்ச்சியில் மக்கள்..!!

Read Next

NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! 1765 காலியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular