ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ் (25). டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான இவர் மாநில அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றுள்ளார். இவர் இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிடுவது தொடர்பாக தந்தையுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஜூலை 10) ராதிகாவை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




