சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.8) சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. நேற்று (செப்.07) ஒரு சவரன் ரூ.80,040க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.79,760க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.10,005க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.9,970க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.




