தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை பெறுவதற்கான பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கின. தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காததால், மாநிலத்திற்கான நிதியை வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால், நடப்பு கல்வியாண்டில் (2025-2026) தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கையை தொடங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இருப்பினும், இந்த ஆண்டு சேர்க்கைக்கான நடைமுறைகள் பள்ளிகள் மூலமாக நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




