கோடைகாலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கின்ற இந்த வேளையில் மக்கள் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தினமும் குறைந்தபட்சம் ஒரு சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமாவது பதிவாகின்றது என்று நமக்கு நன்றாகவே தெரியும். இந்த நேரத்தில் ஒரு இன்பச் செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் புதுவை காரைக்காலிலும் வரும் மே மாதம் நான்காம் தேதி வரை மழை அதிகரிக்கும் என IMD அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வெயில் காலத்தில் மழை பெய்தால் சற்று நன்றாக இருக்கும் என்று அனைத்து மக்களும் நினைக்கின்ற தருவாயில் இந்த அறிவிப்பை IMD தெரிவித்துள்ளது.




