கடந்த சில நாட்களாக தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. மார்ச் மாதம் முதலே வெயில் அதிகரித்து வந்த வேலையில் இப்போது சுமாராக அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நேரத்தில் வேலூரில் பெய்திருக்கும் ஆலங்கட்டி மழை அனைவரையும் குதூகலம் படுத்தியுள்ளது.
வேலூரில் சுமாராக தினமும் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வரும் வேளையில் அந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படி இருக்கும் நேரங்களில் இன்று ஒடுகாத்தூர் என்னும் பகுதியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து அனைவரையும் வியக்க வைத்தது.
வெப்பத்தின் நிலையை தாங்க முடியாமல் இருந்த மக்களுக்கு இது ஒரு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. சுமார் அரை மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்ததால் அந்தப் பகுதி இப்போது குளுகுளுவென இருக்கிறது. ஆகையால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.




