தலைவலி ஏன் வருகிறது தெரியுமா?.. இதுதான் காரணம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

தலைவலி என்பது உடலின் உள்ளே இருந்து மனிதனை கொல்லும் மிகப்பலமான ஆயுதம். தலைவலி வந்து விட்டால் எம்மால் எந்த வேலையும் செய்யமுடியாமல் போய் விடும்.

இதற்காக நாம் பல வலி நிவாரண மாத்திரைகளை எடுத்து விட்டு அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் விட்டிருப்போம்.

இந்த தலைவலி என்பது நாம் உண்ணும் உணவு நமக்கு ஒத்து போகவில்லை என்றால் இது வரும் மற்றும் நமக்கு உடலில் ஒரு நோய் இருந்தால் அந்த நோயின் அறிகுறியாகவும் வரும்.

சிலருக்கு நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என்ற இந்த இரண்டு தலைவலியின் அடிப்படையில் தான் வரும். தலைவலி ஏற்படுவதற்கான காரணத்தை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைவலி:

1. நமது மூக்கின் வளைவுப்பகுதியில் ஜவ்வில்  வீக்கம் இருந்தால் அடிக்கடி தலை வலி வருகிறது. இந்த பிரச்சனையை அறுவை சிகிச்சை மூலமே சரி செய்யலாம்.

மேலும் கண்களின் பார்வைத்திறன் குறைவாக இருந்தால் தலையின் பின்பக்கமாக வலிக்கும் இது பின்பக்க தலைவலி எனப்படும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.

2. சிலருக்கு ஒற்றை தலைவலி வருவதற்கான காரணம் மூளையின் ரத்த ஓட்டம் சீராக அமையாததுதான். இந்த பிரச்சனை நீண்ட நாளுக்கு மாறாமல் இருக்கும்.

இந்த தலைவலிக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் எடுத்து கொள்ள கூடாது. இதற்கு நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.

3. இரவில் கண் விழித்து நித்திரையை தொலைப்பவர்களுக்கு தலைவலி வரும். சிலருக்கு நடக்கும் போது தலைவலி வருவதுடன் தள்ளாட்டம் வரும்.

மயக்கம் வருவதை போல இருக்கும். சில நேரங்களில் தலையில் அடிபட்டு அதை கவனிக்காமல் விடுவதால் அவர்களுக்கு விட்டு விட்டு தலைவலி வரும்.

இந்த பாதிப்பிற்கான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்து கொள்வது மிகவும் அவசியம்.

4. தீராத தலைவலி உள்ளவர்கள் இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது.

வைரஸ் காய்ச்சலுக்கும் தலைவலி ஆரம்ப அறிகுறியாக வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.

5. இந்த தலைவலியை தாங்கிகொள்ள முடியாதவர்கள் கடைகளில் வலிநிவாரண மாத்திரைகளை வாங்கி உண்ணும் போது  நாளடைவில் அவர்கள் அதற்கு அடிமைகளாகி விடுகிறார்கள்.

இந்த மன அழுத்தத்தின் காரணமாகவும் தலைவலி வரும். நேரத்திற்கு உணவு எடுத்து கொள்ளாமல் பட்டினி கிடப்பவர்களுக்கம் இந்த பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.

Read Previous

அரசு பேருந்தை கடத்திச் சென்ற போதை ஆசாமி..!! பெரும் பரபரப்பு..!!

Read Next

இரவில் தாமதமாக தூங்குபவர்கள் தான் சிறந்த அறிவாளிகள்..!! ஆய்வில் வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular