தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று (ஆக.21) மதுரை பாரபத்தியில் நடைபெறவுள்ளது. அதனையொட்டி மதுரை மாவட்டம் எலியார்பத்தி, வலையங்குளம், காரியாப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை – தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக தெரிகிறது.




