தாய்மார்கள் தங்களது குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு நிச்சயமாக தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான் அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். குறைந்தபட்சமாக ஆறு மாதமாவது பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இன்று தாய்ப்பால் கொடுக்க என்னென்ன சாப்பிடலாம் என்று இந்த பதிவில் காண்போம்.
பாகற்காய்: பாகற்காயில் saponins மற்றும் terpenoids ஆகியவை அதிகமாகவே இருக்கிறது. அது நமது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கரைக்க உதவும். இது சர்க்கரை நோயிருக்கும் தாய்மார்களுக்கு சக்கரையின் அளவை கட்டுப்படுத்த மிகவும் உதவி செய்து தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
கருவேப்பிலை: ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகமாக இருக்கும் கருவேப்பிலையை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இது இதய நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் கால்சியம் இரும்பு சத்து தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து தருகிறது.
தண்ணீர்: தண்ணீரை அதிகமாக குடிப்பது அவசியமாகும். சாதாரணமாக ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.
கொண்டைக்கடலை: இந்த கொண்டைக்கடலையில் நார் சத்து புரதம் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. இந்த சத்துக்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து தருகிறது.
பால்: தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் நிச்சயமாக பாலை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதில் இருக்கும் கால்சியம் புரதம் கொழுப்பு போலிக் அமிலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து தரும்.
இது மட்டும் இலலாமல் மீன் தர்பூசணி நாட்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கு பாதாம் முருங்கைக்கீரை பீட்ரூட் பருப்பு ஆகியவற்றை சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.



