நெல்லிக்காயில் ஊறுகாய் செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

நமக்கு ஊறுகாய் என்றாலே மிகவும் பிடிக்கும். எந்த சாதத்திற்கும் தொட்டுக்கொள்ள ஊறுகாயை நாம் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அதை ஆரோக்கியமான முறையில் செய்வது முக்கியமாகும். அந்த வகையில் செரிமான கோளாறு சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லி ஊறுகாய் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 7

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

வெல்லம் – 100 கிராம்

சீரகத்தூள் – 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி

இஞ்சி – 1 துண்டு

உப்பு – 1/2 தேக்கரண்டி

தண்ணீர் – தேவைக்கு ஏற்ப

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை :

நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் 20 நிமிடங்கள் வேக விட வேண்டும். அதன் விதைகளை நீக்கி ஆற வைக்கவும். ஆறிய பின்னர் அதை துருவ வேண்டும். நெல்லிக்காய் துருவலோடு வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கிளற வேண்டும்.

வெள்ளம் கரைந்ததும் இஞ்சி விழுது மிளகாய் தூள் சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும். இதோடு பெருங்காயத்தூளும் எலுமிச்சை சாறும் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இறக்கும் போது உங்களுக்கு தாளிக்க வேண்டும் என்றால் தாளித்து சாப்பிடலாம். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான நெல்லி ஊறுகாய் தயார்.

Read Previous

உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை எப்படி பளபளக்க வைக்கிறது என்று தெரியாமல் இருக்கிறீர்களா..!! உங்களுக்கான டிப்ஸ் இதோ..!!

Read Next

தாய்மார்களே..!! தாய்ப்பால் அதிகமாக சுரக்க இந்தந்த உணவுகளை எல்லாம் நீங்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular