தினசரி சமையல் டிப்ஸ்..!! நேரத்தை மட்டும் அல்ல சமையலையும் எளிதாக கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!
தினமும் இரவில் குக்கரில் கேஸ்கட் வெயிட் முதலியவற்றை நன்கு சுத்தம் செய்வதுடன் குக்கர் மூடியில் உள்ள சேஃப்டி வால்வையும் சரி பார்ப்பது மிகவும் நல்லது. இப்படி செய்வதன் மூலம் காலை அவசரத்தில் பிரச்சனைகள் வராமல் சமைக்க முடியும். சமையலறையில் இரண்டு கிடக்கிகளை நல்ல நிலையில் எப்போதும் வைத்திருங்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்டவ் எரியாமல் இருக்கும் போது கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய வேண்டும். கேஸ் அடுப்பு ஒரு பக்கம் எரிந்து கொண்டு இருக்கும்போதே மற்ற பாகங்களை துடைத்து சுத்தம் செய்வது கூடாது. ஸ்டவ் எரியாமல் இருக்கும் பொழுது தான் சுத்தம் செய்ய வேண்டும். அடுப்பின் ஒரு பர்னரில் சூடான எண்ணெய் உள்ள பாத்திரமிருந்தால் பக்கத்தில் உள்ள பாத்திரத்தில் இருந்து நீர் திவலைகள் அதில் சொட்டி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் எண்ணெய் வெடித்து விபரீதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.




