திருமணத்தைப் பற்றிய ஒரு அழகான பதிவு..!! கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டும்..!!

Oplus_131072

 

* நீ விரும்புபவரை விட உன்னை விரும்புபவரை திருமணம் செய்வதே மகிழ்ச்சிக்கான வழி.

* திருமணம் மூலம் இரு மனங்கள் இணையவில்லை. இரு குடும்பத்தினர் இணைகிறார்கள்.

* விட்டுக் கொடுக்கும் எண்ணமே திருமண வாழ்வின் ஆகச் சிறந்த முதல் தியாகம்.

* திருமணம் என்பது சரியான துணையை தேர்ந்தெடுப்பது அல்ல. சரியான துணையாக வாழ்வது.

* ஈகோ எங்கு முடிகிறதோ அங்கு இனிமையான இல்லற வாழ்க்கை தொடங்குகிறது.

* கோபமுடன் சண்டையிட்ட பின்பு வருந்துவதை விட, ஒருவரை ஒருவர் முகம் பார்க்கும் போது சிரிப்பை அடக்குவதே நல்ல தம்பதியர் பண்பு.

* அதிகம் புரிதல் இருக்கும் தம்பதியரின் முகஜாடை கூட ஒன்று போல அமைந்திருக்கும்.

* பணம், செல்வம், அழகு, பதவி, அந்தஸ்து பார்த்தே திருமணம் நிச்சயப்படுகிறது. ஆனால் அன்பு இருந்தால் மட்டுமே இந்த பந்தம் நீடிக்கும்.

* திருமணத்தின் மூலம் தோழியை ஒருவன் மனைவியாக்கி கொள்ளலாம். ஆனால் மனைவியை தோழியாக்க பரந்த மனம் வேண்டும்.

* மனைவியின் நகைகள் பற்றிய அறியாத கணவருக்கும், கணவரின் சம்பளம் பற்றிய அறியாத மனைவிக்கும் மனப்பொருத்தம் அதிகம் இருக்கும்.

* மகிழ்ச்சியான திருமண வாழ்வின் ரகசியம் என்பது இன்று வரை யாருக்கும் புரியாத ரகசியமாகவே உள்ளது.

* பெண்ணுக்கு திருமணம் என்பது மரத்தை வேருடன் பிடுங்கி வேறிடத்தில் நடுவது போன்றது.

Read Previous

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாம் சீக்கிரம் சிக்கு வாடை அடிக்காம இருக்க சில சூப்பர் டிப்ஸ்..!!

Read Next

இந்த சின்ன சின்ன சமையல் குறிப்புகளை தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா சமையல் அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular