காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானும் சரி இந்தியாவும் சரி எல்லைகளில் ராணுவப்படையை நிறுத்தி வைத்திருக்கிறது. எல்லைப் பகுதிகளில் ராணுவம் பலமாக இருக்கும் சமயத்தில் ஜம்மு காஷ்மீரில் ஒரு கொலை தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா என்னும் மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில் தனது வீட்டில் இருக்கும் சமூக செயல்பாட்டாளர் குலாம் ரசூல் மாக்கிராய் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு 45 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு சரியாக என்ன நடந்தது என்று தகவல்கள் வெளிவரவில்லை. எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் அதிகமாக இருக்கும் சமயத்தில் இந்த கொலை நடந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் மக்கள் கோபமடைந்திருக்கின்றனர். இந்த தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் நிச்சயம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




