பஹல்காம் தாக்குதல் மொத்த இந்திய நாட்டையுமே உலுக்கியுள்ளது. இதனால் பல மக்கள் உலக அளவில் ஒன்றிணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் தங்களது எல்லைகளில் ராணுவப் படைகளை நிப்பாட்டி வைத்திருக்கிறது. இந்த தீவிரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய நாடு சிந்துநீரை நிப்பாட்டியதும் நமக்கு நன்றாகவே தெரியும்.
அந்த வகையில் ஜம்மு அண்ட் காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு உதவிய உள்ளூர் உதவியாளர்கள் யார் யார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இவர்களை காஷ்மீரி ஓவர் கிரவுண்ட் ஒர்க்கர்ஸ் என்று அழைக்கிறார்கள். இதில் மொத்தம் 15 பேர் உதவியதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருக்கிறார்கள் என்று நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். அவர்களைத் தேடும் வேட்டையில் ராணுவப்படை தொடர்ந்து ஈடுபட்டே தான் வருகிறது. இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று நீங்களே கூறுங்கள்.




