ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் பெங்களூரு அணிக்கும் குஜராத் அணிக்கும் பெங்களூரில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற குஜராத், முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணியின் வீரர்கள் 169க்கு 8 விக்கெட்டுகளை விட்டு 20 ஓவரில் தனது பேட்டிங்கை முடித்தது. இதில், லிவிங்ஸ்டன் என்னும் வீரர் 54 ரன்களும் ஜிதேஷ் சர்மா 33 ரங்களும் டிம் டேவிட் 32 ரங்களும் எடுத்து அசத்தினர். அனால் மத்த வீரர்கள் அவருக்கு கய் கொடுக்கவில்லை. பௌலிங்கில் குஜராத் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்து பெங்களூரு அணியை பந்தாடினார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய குஜராத் அணி இதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், பட்லர் 73 ரன்களும் சாய் சுதர்ஷன் 49 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற அனைவரும் தனது சம பங்களிப்பை கொடுத்ததால் இலக்கை 17.5 ஓவரிலேயே பூர்த்தி செய்து பெங்களூரு அணியை குஜராத் அணி வென்றது.




