நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி?.. அதன் அறிகுறிகள் என்ன?..

நம் உடலில் உள்ள நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு புற்றுநோய் காணப்படுகிறது. இதை குணப்படுத்த இப்பொழுது வரை மருந்து கண்டு பிடிக்கப்படாததால் மக்கள் அல்லோல் பட்டு வருகின்றனர். மேலும் எதனால் இந்த நோய் பரவுகிறது என்று மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தீய பழக்கத்தால் மட்டுமின்றி நம் சாப்பிடும் உணவாலும் கூட இந்த கேன்சர் நோய் உருவாவதாக சிலர் கூறுகின்றனர். வயிற்று புற்றுநோயில் இருந்து பல புற்றுநோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இப்படி இருக்கையில் நாக்கில் தோன்றும் புற்றுநோய்  குறித்து முன்கூட்டியே எப்படி அறிவது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

  • நாக்கு புற்றுநோய் என்பது வாய் முழுவதும் பரவ கூடிய ஒரு கொடிய நோயாகும். நாக்கில்  சிவப்பு அல்லது வெள்ளை புள்ளிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
  • இந்த நோய் நாக்கில் ஆரம்பித்து வாய் உள்ளே தொண்டை வரை பரவும் என்று கூறப்படுகிறது.
  • இந்த நோய் ஏற்பட்ட நபருக்கு தொண்டையில் அதிகமான வலி, குரல் மாற்றம், தாடை வீக்கம், தொண்டையில் ஏதோ ஒன்று சிக்கிக் கொண்டது போல் ஓர் உணர்வு, வாய் அல்லது நாக்கில் உணர்வில்லாமல் இருப்பது போன்றவைகள் காணப்படும். இது தான் இந்த நோயின் அறிகுறிகள் என கூறப்படுகிறது.
  • சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு தான் இந்த நோய் விரைவில் வந்துவிடுவதாக கூறப்படுகிறது.
  • அதுமட்டுமின்றி, மது குடித்தாலும் இந்த நோய் வர அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்கப் பிறந்தவர்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 456 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular