நாதக-வில் இருந்து சேலம் நிர்வாகிகள் 60 பேர் விலகல்..!! காரணம் என்ன?..

நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகள் 60 பேர் விலகியுள்ளதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளனர். கடந்த வாரம் நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொருளாளர் சங்கர், ஏற்காடு சட்டமனற் தொகுதி நிர்வாகி சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் 200 பேர் கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில், தற்போது சேலம் தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் தமிழரசன் தலைமையில் 60 பேர் அடிப்படை உறுப்பினரிலிருந்து தாங்கள் விலகி கொள்வதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கட்சியில் சரியான தலைமை பண்பு இல்லை. கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. இதனால் கட்சியில் இருந்து என்னுடன் பயணித்த 60 உறுப்பினர்களும் விலகி உள்ளோம் என்றார்.

Read Previous

கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

வேண்டுமென்றே தவறு செய்துவிட்டு சிறை செல்லும் முதியோர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular