நீங்களே சொல்லுங்கள் நான் எழுதுவது கவிதையா அல்லது புலம்பலா?.. படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

இன்றோடு நிறுத்தி விடு

என்கிறது ஒரு மனம்

ஏன் நான் நிறத்த வேண்டும்

என்கிறது மற்றொரு மனம் ..

 

இந்த இரண்டு

மனங்களுக்கிடையில்

எனது பேனாவும் விரல்களும்

பாவம் சிக்கித் தவிக்கிறது…

 

எப்படி எழுதினால் என்ன

எனக்கு எழுதுவது

பிடித்திருக்கிறது

என்கிறது ஒரு மனம்..

 

இதெல்லாம் ஒரு கவிதையா

என ஏளனமாய் பார்க்கிறது

மற்றொரு மனம்…

 

அப்படியென்றால் நான்

புலம்பி தீர்பெதெல்லாம்

“கவி” தையில் சேராதா !?

 

புலம்புவதை கொஞ்சம்

#மிகை_படுத்தல் தானே

“கவிதை” என்பதே..

 

இப்போது நீங்களே சொல்லுங்கள்

நான் எழுதுவது கவிதையா

அல்லது புலம்பலா… !?

 

Read Previous

சிறிய தவறுகள் = பெரிய பாடங்களின் அடிக்கலம்..!! ஊக்கமூட்டும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மனைவி கட்டாயம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular