நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்ற நேபாளத்தில், இடைக்கால அரசு அமைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால அரசின் பிரதமராக நேற்று (செப்.12) பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், நேபாளம் இந்தியாவின் நெருங்கிய நண்பன் என்றும், சுசீலா கார்கி முதல் பெண் பிரதமர் என்பது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த உதாரணம் என்றும் தெரிவித்துள்ளார்.




