பச்சை முட்டை சாப்பிடுவது ஆபத்தா..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
பலர் முட்டையை அப்படியே அதாவது பச்சையாக உடைத்துக் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். ஒரு சிலர் இது மிகவும் நல்லது என்பார்கள். ஆனால் இது ஒரு சில பிரச்சனைகளை நம் உடலில் ஏற்படுத்தும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது அதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
பச்சை முட்டையை உடைத்து குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா? அதாவது வேக வைக்காத முட்டையில் பத்து சதவீதம் புரதமும் 90% நீரும் உள்ளது. பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. முட்டையை அப்படியே உடைத்து சாப்பிட்டால் அதில் இருக்கும் வெள்ளை கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். தோல் சிவத்தல் வீக்கம் மற்றும் அரிப்பு வயிற்றுப்போக்கு கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை இது ஏற்படுத்தும். வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும் முட்டையின் வெள்ளை கருவில் புரதம் அதிகமாக இருக்கும். இது சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் .எனவே பச்சை முட்டையை சாப்பிடுவது ஆபத்துதான்.



