இறந்தவர்களின் பெயர்களை பட்டா ஆவணத்தில் இருந்து நீக்குவதற்கும், புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்ப்பதற்கும் தமிழக அரசு அண்மையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் அலைச்சல் இன்றி பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும். உரிய ஆவணங்களுடன், eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள், அல்லது TN nilam citizen portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த புதிய வசதி மூலம், பட்டா மற்றும் சிட்டா ஆவணங்களில் ஏற்படும் மாற்றங்களை விரைவாகச் செய்து முடிக்கலாம்.




