பரிசு அட்டையில் ஒரு ரூபாய் நாணயத்தை ஏன் சேர்க்கிறோம்..?? தெரியாதவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பரிசு அட்டையில் ஒரு ரூபாய் நாணயத்தை ஏன் சேர்க்கிறோம்
ஒரு மங்களகரமான சந்தர்ப்பத்தில் கவரில் பணம் வைக்கும் போது 101, 501, 1001 என வைக்கிறோம். அந்த கூடுதல் ஒரு ரூபாயை ஏன் சேர்க்கிறோம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? அதற்கு நான்கு காரணங்கள் உள்ளன என எனது நட்பு வட்டத்தில் இருந்து எனக்கு ஆங்கிலத்தில் கிடைத்த செய்தியை கீழே குறிப்பிடுகிறேன்.
1 “பூஜ்யம்” ஒரு முடிவைக் குறிக்கிறது அதே நேரத்தில் “ஒன்று” ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. அந்த கூடுதல் ஒரு ரூபாய் நாம் யாருக்கு கொடுக்கிறோமோ அவருக்கு முடிவில்லாமல் ஒரு புதிய தொடக்கம் வருவதற்கு நாம் வாழ்த்துகிறோம்;.
2 கணித ரீதியாகஇ 100, 500 மற்றும் 1000 எண்கள் வகுபடும்; ஆனால் 101, 501 மற்றும் 1001 எண்கள் பிரிக்க முடியாதவை. எங்கள் நல்வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
3 சேர்க்கப்பட்ட ஒரு ரூபாய் அடிப்படைத் தொகையை விட, தொடர்ச்சியின் சின்னமாகும். கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் இடையிலான பிணைப்பை இது பலப்படுத்துகிறது. இதன் பொருள் ,”எங்கள் நல்ல உறவு தொடரும்”.
4 இருப்பினும் சேர்க்கப்பட்ட ரூபாய் நாணயமாக இருக்க வேண்டும் ஒரு ரூபாய் நோட்டாக இருக்கக்கூடாது. ஒரு நாணயம் உலோகத்தால் ஆனதுஇ இது தாய் பூமியிலிருந்து வருகிறது, அது லட்சுமி தேவியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. பெரிய தொகை ஒரு முதலீடாக இருந்தாலும், அந்த முதலீட்டின் மேலும் வளர்ச்சிக்கு ஒரு ரூபாய் நாணயம் “விதை” ஆகும்.
முதலீடு பணமாகவோ ,பொருளாகவோ அல்லது கர்மாவாகவோ வளர உங்கள் நல்வாழ்த்துக்களும் ஆசிகளும்.
மேற்கண்ட நான்குமே நாம் 101, 501, 1001 என தொகை கொடுப்பதற்கான காரணம்.

Read Previous

எப்படி இருந்த பழமொழிகள் இப்படி போச்சே..!! சரியான விளக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

முருகனுக்கு ஏன் காவடி எடுக்கிறோம் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular