ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் பெங்களூரு அணிக்கும் மும்பை அணிக்கும் மும்பையில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற மும்பை, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணியின் வீரர்கள் 221க்கு 5 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், விராட் 67 ரன்களும் ரஜத் பட்டிதார் 64 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற வீரர்களும் அவர்களுக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் மும்பை அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் பாண்டியா மற்றும் போல்ட் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
மும்பையின் திலக் வர்மா என்னும் வீரர் 56 ரன்களும் பாண்டியா 42 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கவில்லை. இறுதியில் மும்பை ஆள் வெறும் 209 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டியை வென்ற பெங்களூரு அணி தனது மூன்றாவது வெற்றியை இந்த வருடம் பதிவு செய்தது.



