நமக்கு வீடு சுத்தமாக இருந்தால் தான் மிகவும் பிடிக்கும். இல்லையெனில் எதோ ஒரு குறை இருப்பது போன்று தெரியும். அப்படி இருக்க, இந்த மின்விசிறியை சுத்தம் செய்வது நமக்கு பெரிய வேலையாகத் தெரியும். ஏனெனில் அடிக்கடி அதில் கரை படிந்து விடும். அதில் இருக்கும் ஒட்டடை, தூசி, எண்ணெய் பிசுபிசுப்பை எப்படி சுத்தம் செய்வது என்று நமக்கு தெரியாது. அப்படியே செய்தாலும் அது மிகவும் கடினமாக இருக்கும். இதற்கு ஒரு சரியான தீர்வை இந்த பதிவில் காண்போம்.
தேவையானவை :
வினிகர் – 1 கப்
தண்ணீர் – 3 பெரிய டம்ளர்
வாஷிங் திரவம் – 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா – 5 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்து அதன் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளின் படி வினிகர், தண்ணீர், வாஷிங் திரவம், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து கொள்ளவேண்டும். பின் அதை நன்றாக கலந்துக் கொள்ளவும்.
அந்த கரைசலில் ஒரு காட்டன் துணியை எடுத்து 5 முதல் 10 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். இப்போது, அந்த துணியை லேசாக பிழிந்து விட்டு மின்விசிறியின் இறக்கைகளை நன்றாகத் துடைத்து எடுக்க வேண்டும். இப்போது மின்விசிறி பார்க்க புதிது போல இருக்கும். மேலும், எண்ணெய் பிசுபிசுப்பும் சுத்தமாக அதில் இருக்காது.



