பருப்புகளை உணவில் சேர்த்து கொள்ளாதவரா நீங்கள்..?? அவசியம் இதை படியுங்கள்..!!

Oplus_131072

பருப்புகளை உணவில் சேர்த்து கொள்ளாதவரா நீங்கள்? அவசியம் இதை படியுங்கள்

பருப்புகள்

பருப்பினால் செய்த எந்த ஒரு உணவை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும், அதனால் உங்கள் உடலுக்குக் கிடைக்கும் பலன்கள் அதிகம். இந்திய உணவு வகைகளில் முக்கிய அம்சமாக பருப்புகள் இருக்கின்றன. உலகின் மிக ஆரோக்கியமான ஐந்து உணவுப் பொருள்களில் பருப்புகளும் ஒன்று. பயறு, பருப்பு வகைகளில் வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் நிரம்பியிருக்கின்றன.

பருப்புகளினால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைகின்றன என்பதை பின்வருமாறு பார்ப்போம்.

ரத்தத்தை அதிகரிக்கும்

எல்லா பெண்ணும் தன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது, குறைவான ஹீமோகுளோபின் எண்ணிக்கை சிக்கலை சந்திக்கிறார். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான ரத்தம் வெளியேறுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக மருத்துவர்கள் இரும்பு சத்து டானிக்குகளை பரிந்துரைகின்றனர். அந்த நிலையில் அயர்ன் டானிக்குகளின் சுவை பிடிக்காவிட்டால், தாராளமாக பருப்பு சாலட் சாப்பிடலாம். தினசரி எடுத்துகொள்ள வேண்டிய இரும்பு சத்தின் அளவில் 37 சதவீதம் ஒரு கப் பருப்பில் கிடைக்கிறது. இதனால் தான் பெரும்பாலான மருத்துவர்கள் பருப்புகளை உணவில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

உடல் எடையை குறைக்கும்

பருப்பு வகைகளில் நல்ல கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இவை மெதுவாக செரிமானமாகும் தன்மை கொண்டவை. இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைப் பெறுவீர்கள். பருப்புகளில் உள்ள நார்ச்சத்தும் இதற்கு முக்கிய காரணம். அமெரிக்கன் காலேஜ் ஆஃப் நியூட்ரிஷியன் இதழில் வந்த சமீபத்திய ஆய்வு ஒன்றில், அதிகமாக பீன்ஸ் சாப்பிடுபவர்களுக்கு, பீன்ஸ் சாப்பிடாதவர்களைவிட குண்டாகும் வாய்ப்பு 22 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். பீன்ஸ்களில் கரையும் நார்ச்சத்து இருக்கிறது. இது செரிமானத்தை மெதுவாக்கும், வயிறு நிரம்பிய உணர்வு நீண்ட நேரம் இருக்கும். ஒரு கப் கருப்பு பீன்ஸில், தினசரி நமக்கு தேவைப்படும் நார்ச்சத்தில் 60 சதவீதம் கிடைக்கிறது.

இதயத்துக்கு நல்லது

பருப்புகளில் உள்ள ஃபைபர் உங்கள் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கும், மேலும் இதயத்துக்கும் நல்லது. பருப்புகள் போன்ற அதிக நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதால், இதய நோய்களைத் தடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இவற்றில் உள்ள மக்னீசியம் இதயத்துக்கு நல்லது. பருப்புகளில் உள்ள கரையும் நார்ச்சத்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது

நீரிழிவு நோயாளிகளுக்கு பருப்பு வகைகள் சிறப்பான உணவாகும். நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

பருப்பு வகைகளை முளைக்கட்டி சாப்பிடுவது சிறந்த வழி. அதிகமான யூரிக் அமிலம் கொண்டவர்கள் மற்றும் தைராய்டு பாதிப்பு கொண்டவர்கள் மட்டுமே பருப்பு வகைகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். மற்ற எல்லோரும் எல்லாவிதமான பருப்பு வகைகளையும் தாரளமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.

 

Read Previous

அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லலாமா..?? கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை படிங்க..!!

Read Next

காலையில் கண் விழித்ததும் இதையெல்லாம் பார்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகுமாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular