ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது..!!படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

ஆலங்குடியை சேர்ந்த உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்
-அன்பு

அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்
-பகிர்ந்துண்ணல்

ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.
-மூடநம்பிக்கை

இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே…”
-உரிமை

எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் அதிகாரி. “இது எந்த ஊர் பழம்”, ஆலங்குடிங்க… “சாரி நான் பண்ருட்டி பழம் மட்டும்தான் சாப்பிடுவேன்”.
-திமிர்

கீழ் வீட்டுக்கு கொடுத்தேன் ‘கர்த்தருக்கு நன்றி’ என்றார்
-மதம்

வீட்டு பணி பெண்ணுக்கு கொடுத்தேன் “இந்த வருஷம் என் பேரப்புள்ளைங்க சாப்பிடப்போற முதல் பலாச்சுழை இதுதான்” என்றாள்.
-ஏழ்மை

நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். “மச்சான் அடுத்த வருஷம் எனக்கு முழு பழமா கொடுக்கணும்” என்றான்.
-நட்பு

துணைவியாருக்கு ஒரு துண்டு
-கடமை

என்னால் ஒரு சுழைகூட சாப்பிடமுடியவில்லை
– நோய்

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது.

படித்ததில் பிடித்தது ..

Read Previous

வெட்டிவேரும் அதன் மருத்துவ நன்மைகளும்..!! அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

“கால் ஆட்டினால் குடும்பத்திற்கு ஆகாது”என முன்னோர்கள் கூறுவதற்கான காரணம் இதுதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular