ஒரு அரசியல்வாதி ரோடுகளில் செல்லும்போதுஅரை மணி நேரம் அந்த ரோட்டில் இருக்கும் வாகனங்களை முற்றிலுமாக நிறுத்தி விடுவார்கள். அப்படி நடப்பதனால் பல பேருக்கு காலதாமதம் ஆகும். இது ஒரு சில பேருக்கு பிரச்சனைகள் வராமல் இருக்கலாம். ஆனால் ஒரு சிலரின் எதிர்காலம் இதனால் பாதிப்படுகிறது. அப்படி இன்று பவன் கல்யாண் ஆல் 30 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் தான் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆவார். இவருக்கு ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே ஆந்திரா தெலுங்கானாவில் இருக்கின்றனர். ஆனால் இவர் செய்த ஒரு காரியம் 30 பேரின் வாழ்வை சரித்துள்ளது. நேற்று பவன் கல்யாண் காண்வாயினாள் வெகு நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் ஜெஇஇ பரிட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களுக்கு காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் அவர்களால் அந்த பரிட்சையை எழுத முடியவில்லை.
மாணவர்கள் தங்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது என்று காவல்துறையிடம் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதற்கு காவல்துறையோ போக்குவரத்திற்கும் இவர்கள் தேர்வு எழுதாமல் போனதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.



