பாத வெடிப்பை தவிர்க்க நாம் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் இதுதான்..!!
பாத வெடிப்பு என்பது நம் உடலில் பித்தம் அதிகமாகும் போது உடலில் சூடு அதிகரித்து விடுவதால் பாதங்களில் உள்ள ஈரப்பதம் குறைந்து போகும் தருணத்தில் பாத வெடிப்பு வருகிறது. நம்முடைய கால் பாதத்தில் உள்ள ஈரப்பதத்தை குறையாமல் பராமரித்துக் கொள்வதன் மூலம் பாத வெடிப்பை தவிர்க்க முடியும். உடல் எடை அளவுக்கு மீறி அதிகமாக இருக்கும் பட்சத்தில் பாதங்களில் அழுத்தம் ஏற்படும் அத்தகைய அழுத்தத்தின் மூலம் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்படலாம். எனவே உடல் எடையை சராசரியாக முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். அதிகமான நேரம் இன்று இருக்க வேண்டிய வேலைகளில் இருப்பவர்கள் மற்றும் நிறைய நேரம் நடந்து வேலை செய்யும் வேண்டும் என்று இருப்பவர்களுக்கு பாத வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.எனவே அத்தகைய வேலையில் இருப்பவர்கள் சிறிது நேரம் உங்கள் பாதங்களுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் பாத வெடிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். செருப்பணியாமல் இருப்பவர்களுக்கும் மற்றும் சரியான அளவு செருப்பினை பயன்படுத்தாதவர்களுக்கும் பித்த வெடிப்பு ஏற்படுவது எளிது எனவே செருப்பினை சரியான முறையில் கையாள்வது மிகவும் அவசியம். குளிக்கும்போது பாதங்களின் நன்கு தேய்த்து குளிக்க வேண்டும் இதுவும் மிகவும் அவசியமான ஒன்று இவ்வாறு செய்வதன் மூலமும் பாத வெடிப்பிலிருந்து நாம் தப்பிக்கலாம்.




