பாரதிராஜாவின் மகன் திடீர் உயிரிழப்பு..!! வருத்தத்தில் திரைத்துறையினர்..!!

இயக்குனர் மற்றும் குணசித்ர நடிகர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

இவர் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து மக்களிடம் பெரும் ஆதரவு பெற்று இருந்தார். பின்னர், தொடர்ந்து படம் நடித்த இவர், சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் அண்மையில் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் அனைவராலும் வரவேற்கப்பட்டது. அதுமட்டுமின்றி 2023ஆம் ஆண்டு வெளிவந்த மார்கழி திங்கள் படத்தில் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடதக்கது. இவருக்கு திருமணம் ஆகி இரு புதல்விகளும் உள்ளனர்.  இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிறிது நாட்களுக்கு முன்பாக இவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மருத்துவ கண்கணிப்பில் இருந்த இவர்,  சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது ரசிகர்கள் இடையே பேரதிர்ச்சியையும் வருத்தத்தையும் உண்டாக்கியுள்ளது.  மேலும்,  இவரது இறப்பிற்கு பல திரை துறையினர் ஆறுதல் அளித்து வருகின்றனர்.

Read Previous

இரண்டு நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற திட்டம்..!! அமைச்சர் கே.என் நேரு அறிவிப்பு..!!

Read Next

இதெல்லாம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..!! மக்களே உஷார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular