நம் அனைவருக்கும் காய்கறிகளை அதிகமாக வாங்கி அதை குளிர்சாதன பெட்டியில் வைப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. குளிர்நிலை வெப்பநிலை மாற்றத்துக்கு ஏற்ப சில பொருட்களை நாம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். ஆனால் ஒரு சில பொருட்களை இயற்கையாகவே வளர விடுவது நல்லது. பழங்களை மற்றும் காய்கறிகளை நாம் பிரிட்ஜில் சேமித்து வைத்தால் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று வைக்கக்கூடாது.
அதிகப்படியான காய்கறிகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க குளிர்சாதன பெட்டியில் நாம் அதை வைத்திருப்போம். ஆரஞ்சு ஆப்பிள் போன்ற பழங்களை நாம் ஒன்றாக சேர்த்து வைக்கலாம். ஆனால் ஒருபோதும் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்து வைக்கக் கூடாது. ஏனெனில் காய்களில் இருந்து எத்திலின் வாயு வெளியேறும். இது மற்ற பழங்களை பழுக்க வைக்கிறது. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரே பாத்திரத்தில் சேர்த்து வைக்கக் கூடாது.
இந்த இரண்டு காய்களையும் தனித்தனியாக தான் வைக்க வேண்டும். மேலும் இதற்கு நல்ல காற்றோட்டம் தேவை. இல்லையெனில் இவை கெட்டுப் போய்விடும். பேரிக்காய் மற்றும் பூசணிக்காயை ஒன்றாக வைக்க கூடாது. இதனால் பூசணி கெட்டுப் போகும் அபாயம் அதிகமாக இருக்கிறது. குளிர்சாதன பெட்டியில் வெள்ளரிக்காயை வைக்கும் போது அதை வேறு எந்த காய்கறிகளோ அல்லது பழங்களோ, அதனுடன் சேர்த்து வைக்கக் கூடாது. மேலும் கிழங்குகளை எப்போதும் பிரிட்ஜில் வைக்க வேண்டாம். இப்படி செய்வதற்கு பதிலாக நமது தேவைக்கேற்ப காய்கறிகளை வாங்கி விட்டு உபயோகிப்பது மிகவும் நல்லது.



