மனைவி தன்னை விட்டுச் சென்றதால், தனது 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த 42 வயது நபர் தனது மகளை 2 மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி பக்கத்துவீட்டுக்காரர்களிடம் கூறி தன்னை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லுமாறு கூறியதால் உண்மை தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.




