நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை சேர்த்து வைப்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நமக்கு பிடித்தமான உணவுகளை ஆரோக்கியமாக செய்து சாப்பிடுவது முக்கியம். அந்த வகையில் புதினா மற்றும் கொத்தமல்லியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருப்பதால் அதை வைத்து பிரியாணி எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – இரண்டு கப்
புதினா, கொத்தமல்லி – ஒரு கப்
வெங்காயம் – இரண்டு
தக்காளி – இரண்டு
பட்டை – சிறிதளவு
பச்சை மிளகாய் – ஐந்து
ஏலக்காய் – ஒன்று
கிராம்பு – நான்கு
உருளைக்கிழங்கு – ஒன்று
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும். பின் வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடி பொடியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை நன்கு கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடான பிறகு புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து பத்து நிமிடங்கள் வதக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரை எடுத்து அடைப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்து தாளிக்கவும். இஞ்சி பூண்டு விழுது அதில் சேர்த்து வெங்காயம் தக்காளி சேர்த்துக் கொண்டு அதனை நன்றாக வதக்க வேண்டும். பின் அதில் உருளைக்கிழங்கு மசாலா உப்பு போன்றவற்றை சேர்த்து கிளற வேண்டும். அதனுடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் இரண்டு விசில் வரும் வரை வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி புதினா பிரியாணி தயார்.




