பிரியாணி மசாலாக்களின் மருத்துவ பயன்கள்.. பற்றி தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!
பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பிரியாணி என்றால் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவோம் இந்நிலையில் பிரியாணியில் சேர்க்கப்படும் பிரியாணி மசாலாக்களின் மருத்துவ பலன்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். வளைகுடா இலை என்று சொல்லக்கூடிய பிரியாணி இலை செரிமான நொதிகளை தோண்டி செரிமானத்தை எளிதாக்கும். வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக இது இருக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன் ரத்தசக்கரை அளவையும் இது கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கிற ரூட்டின் மற்றும் பைக் அமிலம் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் ரத்த கொதிப்பையும் கட்டுக்குள் வைக்கிறது. அதுமட்டுமின்றி ஜாதிக்காய் விதையை மூடியிருக்கும் லேயரான ஜாதி பத்திரி இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமான பாதையில் ஏற்படும் வலி வீக்கம் மற்றும் அலர்ஜியை குறைக்கிறது மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஜாதிக்காயில் உள்ள வைட்டமின் சி வைட்டமின் ஈ ஆன்டி ஆக்சிடென்ட் சருமத்தை மேம்படுத்தும் பல் ஆரோக்கியத்தை காக்கும்.



